இன்று துவங்கும் எல்.ஐ.சி பங்கு விற்பனை..!!

lic ipo
LIC

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த எல்.ஐ.சி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு விற்பனை இன்று துவங்குகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக உள்ளது எல்.ஐ.சி. அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கான பங்கு ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்ட நிலையில், பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கான பங்கு விற்பனை இன்று துவங்குகிறது.

எல்.ஐ.சி.யின் ஒவ்வொரு பங்கினையும் தலா ரூ. 902 முதல் ரூ. 949 வரையிலான விலையில் மத்திய அரசு விற்பனை செய்யவுள்ளது. இதன்மூலம் ரூ. 21 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எல்.ஐ.சி பங்கினை வாங்க விரும்புவர்கள் Groww, Upstox, Zerodha உள்ளிட்ட செயலிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு விற்பனைக்குப் பிறகு எல்.ஐ.சி-யில் 96.5 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு வைத்துக் கொள்ளும். லாபத்தில் இயங்கி வரும் எல்.ஐ.சி பங்குகளை வாங்க கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version