கோடிக்கணக்கான போலி ரேஷன் கார்டுகள்.. ஒழிக்க அரசு செய்தது என்ன?

பொது விநியோக முறையில் புகுத்தியுள்ள நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கான போலி ரேஷன் கார்டுகள்  ஒழிக்கப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர், ரேஷன் கடைகள் மூலம் மானிய விலை உணவு தானியங்களை பெற்று வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை  கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி  3ல் 2 பங்கு.  தற்போது 80 கோடிக்கும் அதிகமானோர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.3, 2, 1 என்ற மானிய விலையில் மாதந்தோறும் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.

அதேசமயம் போலி ரேஷன் கார்டுகள், இரட்டை ரேஷன் கார்டுகள் என பல தரப்பட்ட மோசடி சம்பவங்களும் இதில் அரங்கேறி வந்தன. இந்த சூழலில் தான் பொது விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, தொழில்நுட்ப ரீதியிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

பயனாளிகளுக்கு ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட, டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.  இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டன. அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு முதல் 2020 வரை 4.39 கோடி போலி ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நீக்கியுள்ளன.  நேர்மையான பயனாளிகளுக்கு பழைய ரேஷன் கார்டுகளில் பெயரை நீக்கி, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 

Exit mobile version