நீட் தேர்வுக்கு தடை இல்ல..6 மாநில அரசுகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 6 மாநில அரசுகள் சார்பில் போடப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி:

நீட் தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 13 ம் தேதியும், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1-6 வரையும் நடக்கும் என தேசிய தேர்வு ஆணையம் அறிவித்தது.இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்த கூடாது எனவும் . பல்வேறு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை இயற்கை பேரிடர்கள் சூழ்ந்துள்ள நிலையில் எவ்வாறு தேர்வுகளை மாணவர்கள் எழுத முடியும் என பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்த கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என்றும் கூறி நீட் தேர்வுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அரசுகள் தொடர்ந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ,நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

Exit mobile version