பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒகினவா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
எதிர்வரும் விழாக்காலத்தை முன்னிட்டு அனைத்து துறையை சேர்ந்த நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும், தள்ளுபடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ஒகினவா எனும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு, குலுக்கல் முறையில் வீட்டு உபயோக எலெக்ட்ரிக் சாதனங்கள் போன்றவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஒகினவா நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை முன்பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பதிவு செய்யம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்கள் தேர்வு செய்யும் அதே தீம்களில் வண்ணம் அடித்து தரப்படுகிறது. இதனிடையே, ஒவ்வொரு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முன்பதிவிற்கும் ரூ.6000 வரை கிப்ட் வவுச்சர் வழங்கபடுகிறது.
இதோடு சில கூப்பன்களும் வழங்கப்படுகிறது. இதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு ஒகினவாவின் ஆர் 30 ஸ்கூட்டரும், 10 அதிஷ்டசாலி நபர்களுக்கு வீட்டு உபயோக மின்சாதனங்களும் வழங்கப்படவுள்ளது. அந்த அதிஷ்டசாலி நபர் நவம்பர் 30ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பபட்டு உள்ளது.
