பாய் பிரண்ட் இல்லாவிட்டால் பெண்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம் : கல்லூரி நோட்டீஸால் அதிர்ந்த பெற்றோர், மாணவர்கள்

ஆக்ராவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பிப்ரவரி 14 ம் தேதி மாணவிகள் பாய் பிரண்ட் இல்லாவிட்டால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்ற நோட்டீஸ் வெளியானதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா:

ஆக்ராவின் உள்ள பிரபல செயின்ட் ஜான்’ஸ் கல்லூரி. இந்த கல்லூரியில் பேராசியர் ஆசிஷ் ஷர்மா என்ற பெயரில் கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தொடர்ந்து சர்ச்சையையும் கிளப்பியது.

அதில், ஜனவரி 14 தேதி என குறிப்பிடப்பட்ட அந்த நோட்டீஸில், வருகின்ற பிப்ரவரி 14 ம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு பாய் பிரண்டாவது இருக்கவேண்டும் என்றும், இது பாதுகாப்பு கருதி அறிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிங்கிளாக இருக்கும் மாணவிகள் யாரும் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை. மாணவிகள் சமீபத்தில் தங்கள் பாய் பிரண்ட் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பிக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Read more – 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞர் : 44 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவு

இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ந்த மாணவிகள் உடனடியாக தங்களின் பெற்றோர்களுடன் தெரிவிக்க, பெற்றோர்களின் மூலம் இந்த நோட்டீஸ் தகவல் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சிங்கின் கவனத்திற்கு சென்றது. இதுபற்றி அவர் விசாரித்து கல்லூரி முதல்வர், கல்லூரியின் பெயரை குலைக்க சிலர் சதிவேலையில் ஈடுபட்டு தவறான செய்தியை பரப்பியிருக்கின்றனர். எனவே மாணவிகள் அந்த நோட்டீஸை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, ஆசிஷ் சர்மா என்ற பெயரில் பேராசிரியர் யாரும் பணிபுரியவில்லை. இது கடைசி வருட மாணவர்களின் வேலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version