ஒடிசாவின் கன்ஜம் மாவட்டம் “சூப்பர்” என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பாராட்டு… ஏன்னு தெரியுமா???

கொரோனா தடுப்பு நடவடிக்கைககளில், ஒடிசாவிலுள்ள கன்ஜம் மாவட்டத்தின் கொரோனா தொற்று மேலாண்மை சிறப்பாக செயல்பட்டுவருவதாக, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
Odisha CM Naveen Patnaik

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், சுமார் 310 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வு பணிகளையடுத்து, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது, ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்தில், முதல் கொரோனா நோயாளி மே 2-ஆம் தேதி கண்டறியப்பட்ட நிலையில், ஆனால் அங்கு தற்போது 188 நோயாளிகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது. ஒடிசா மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதால், ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பரிசோதனைகளை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் கலந்துக்கொண்டு உதவி வந்துள்ளனர். 5 கிராமங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற விகிதத்தில் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியிலும், கொரோனா கட்டுப்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும், பாராட்டி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தான், கொரோனா நோய் தடுப்புப் பணிகளில் பஞ்சாயத்துகளின் பணி முக்கியமானது எனக் கருத்தில் கொண்டு, மாவட்டக் கலெக்டர்களுக்கு நிகரான அதிகாரத்தை, பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்கி, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒடிசா மாநில அரசின் கொரோனா தடுப்பு நிர்வாகம், பாராட்டைக் குவித்து வருகிறது. ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே, இந்த வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version