உலக வாழ்க்கைக்கு யோகா அமைதியை தருகிறது: பிரதமர் மோடி..!!

PM Modi
PM Modi

யோகா நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரமாண்டமான யோகா பயிற்சி நடத்தப்பட்டது. சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்நிகழ்வில், பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து பேசிய அவர், யோகா பயிற்சி தனிநபர்களுக்கு மட்டுமில்லாமல் நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியை தருவதாக கூறினார். உடலையும் மனதையும் சீராக வைத்திருக்க யோகா பெரியளவில் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யோகா பயிற்சி செய்வதன் மூலம் நமக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அண்டத்துக்கே யோகா தான் அமைதியை கொடுக்கிறது என்று பிரதமர் மோடி மேலும் பேசினார்.

Exit mobile version