108 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி…!!

Hanuman Jayanti
Hanuman statue

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆஞ்சநேயர் சிலையை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று திட்டமிட்டது. அதன்படி முதல் முயற்சியாக ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள சிம்லாவின் 2010-ம் ஆண்டு முதல் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது.

அதையடுத்து இரண்டாவது ஆஞ்சநேயர் சிலை குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சிலை 108 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் துவங்கப்பட்ட இச்சிலையின் கட்டுமான பணிகள், இரண்டாண்டுகளாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

https://twitter.com/narendramodi/status/1515161120809512964

அதை தொடர்ந்து பேசிய மோடி, ஆஞ்சநேயர் சிலை குஜராத்தின் மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சிலையை நிறுவுவது மூலம் ஒரே நாடு சிறந்த நாடு என்பது உறுதி செய்யப்படுகிறது என்று அவர் பேசினார்.

குஜராத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்கத்திலும் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்படவுள்ளது. தன்னுடைய உரையில் மோடி இந்த தகவலையும் குறிப்பிட்டு பேசினார்.

Exit mobile version