
பிரவசத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்த விரக்தியில் மகப்பேறு மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. இவர் அங்குள்ள லால்சொட் என்கிற பகுதியில் கணவருடன் சேர்ந்து ஒரு மருத்துவமனை வைத்துள்ளார். சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக அர்ச்சனா ஷர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசவ வலி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவர்கள் உறவினர்களுக்கு தெரியவந்தவுடன், போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அர்ச்சனா ஷர்மா தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே, அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி முழக்கமிட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கர்ப்பிணி பெண் இறந்தது தொடர்பாக மருத்துவர் அர்ச்சனா ஷர்மா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அர்ச்சனா ஷர்மா தன்னுடைய அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
