சக வீரரிடம் ரூ. 1.30 கோடி கொடுத்த ஏமாந்த ரிஷப் பண்ட் விசாரணையில் அதிர்ச்சி..!!

rishabh pant
Rishabh Pant

மிகவும் குறைந்த தள்ளுபடி விலையில் உலகின் தலை சிறந்த பிராண்டட் வாட்சுகளை வாங்கித் தருவதாக கூறி பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை சக கிரிக்கெட் வீரர் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் கிரிக்கெட் வீரர் மிருணாங்க் சிங், பிரபல தொழிலதிபர் ஒருவரிடம் மிகவும் மலிவான விலையில் சர்வதேச பிராண்டட் கைக் கடிகாரங்களை வாங்கி தருவதாக கூறி ரூ. 6 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி பொருட்களி ஏதுவும் தொழிலதிபருக்கு கிடைக்கவில்லை என்பதால், வீரர் மிருணாங் சிங் மீது அவர் புகாராளித்தார்.

அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் மிருணாங் சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலதிபரை மோசடி செய்தது போலவே இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டையும் அவர் ஏமாற்றியுள்ளது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு ஆடம்பர விலையிலான கைக் கடிகாரங்கள், பைகள், நகைகள் போன்றவற்றை விற்றுள்ளதாக கூறி ரிஷப் பண்டிடம் மிருணாங் சிங் அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம் ஃபிராங்க் முல்லர் வான்கார்ட் யாச்சிங் சீரிஸ் கைக் கடிகாரங்களை வாங்க ரிஷப் ஆசைப்பட்டுள்ளார்.

அதற்காக ரிஷப் கிரேஸி கலர் வாட்ச் ஒன்றுக்கு ரு. 36.25 லட்சமும், ரிச்சர் மில்லே என்கிற மாடல் கடிகாரத்துக்கு ரூ. 63 லட்சமும் மிருணாங் சிங்கிடம் வழங்கியுள்ளார். கூடுதலான ரூ. 65 லட்சத்துக்கு தன்னிடம் ஏற்கனவே இருந்த ஆடம்பர கைக்கடிகாரம் மற்றும் சில நகைப் பொருட்களை மிருணாங்க் சிங்கிடம் அவர் கொடுத்துள்ளார்.

இதற்கு மொத்தமாக ரூ. 1.63 கோடிக்கு காசோலை கொடுத்துள்ளார் மிருணாங்க் சிங். ஆனால் அது பவுன்ஸாகியுள்ளது. அதை தொடர்ந்து தான் இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் வீரர் மிருணாங் சிங்கை கைது செய்துள்ள நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version