கொரோனா மையங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை; சட்டம் என்ன செய்யப்போகிறது!

கொரொனா பாதிப்போடு டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை காட்சிப்பொருளாக பார்க்கும் பார்க்கும் சில ஆண்களுக்கு மத்தியில் பெண் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு பாதுபாப்பு இல்லை என்பது தான் உண்மை. அதற்கு உதாரணம் தான் தற்போது கொரோனா மையங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகள். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள தீன்தயாள் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் நோயாளி ஒருவரை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்குள் டெல்லியிலும் அதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் சத்தார்பூர் கொரோனா சிகிச்சை மையத்தில், 14 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதே மையத்தில் இருந்த 19 வயதான இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. மேலும் இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை காட்சிப்பொருளாக பார்க்கும் பார்க்கும் சில ஆண்களுக்கு மத்தியில் பெண் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு பாதுபாப்பு இல்லை என்பது தான் உண்மை. அதற்கு உதாரணம் தான் தற்போது கொரோனா மையங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகள்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள தீன்தயாள் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் நோயாளி ஒருவரை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்குள் டெல்லியிலும் அதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் சத்தார்பூர் கொரோனா சிகிச்சை மையத்தில், 14 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதே மையத்தில் இருந்த 19 வயதான இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version