திருமணத்தை நிறுத்த வேண்டுமென தவறான தகவல்களைக் கூறி வந்த பக்கத்து வீட்டுக் காரரின் கடையை இடித்த கேரள இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சேருபுழா என்ற பகுதியில் வசித்து வருபவர் ஆல்பின் மேத்யூ(30).
இவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவரது பக்கத்து வீட்டில் கடை வைத்துள்ளவர்கள், அவரைக் குறித்து அங்கு விசாரிக்க வரும் பெண் வீட்டாரிடம் தவறான தகவல்களைச் சொல்லித் திருமணத்தை நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மேத்யூ, ஒரு ஜேசிபியை வரச்சொல்லி பக்கத்து வீட்டாரின் கடையை இடித்துள்ளார்.
அத்துடன் மேத்யூ தான் கடையை இடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், இந்தக் கடை சட்டவிரோதமாக சூதாட்டத்திற்கும், மது அருந்துவோருக்கும் பயன்படுகிறது. எங்கள் நண்பர்கள் இதனால் பாதிக்கப்படுகிறோம் . எனது திருமணத்தையும் அவர்கள் நிறுத்தி வந்துள்ளன என்ற தகவலையும் கூறி எனவே இந்தக் கடையை இடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.