ஊழல் செய்ய நினைச்சாலே அவ்ளோ தான்… உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு!!

ஊழல் தொடர்பாக நம்பகமான தகவல் கிடைத்தாலே சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யலாம்,
ஊழல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைக்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

தெலங்கானா மாநிலத்தின் ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மிக முக்கியமான தீர்பை இன்று வழங்கியுள்ளது.

அதாவது, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் முறையாக வழக்குகளை பதிவு செய்ததற்கு பிறகு தான் முதல்கட்ட விசாரணையை தொடங்க வேண்டும் என்பது இல்லை! தங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சிபிஐ முதற்கட்ட விசாரணை செய்யலாம் என தெரிவித்து உள்ளனர்.

ஊழல் வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியம் இல்லை, எனினும் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Exit mobile version