விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் டிசம்பர் 3 ம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது:அகில இந்திய டாக்சி யூனியன் அறிவிப்பு

விவசாயிகள் பிரச்சனைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் டிசம்பர் 3 ம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது என்று அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

வேளாண் மசோதாக்களை திரும்பபெற கோரி கடந்த 5 நாட்களாக அரியானா,பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு வரும் 3 ம் தேதி அவர்களின் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.

இந்தநிலையில் விவசாயிகள் பிரச்சனைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் டிசம்பர் 3 ம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது என்று அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் பல்வந்த் சிங் புல்லார் கூறியதாவது:‘டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு எங்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் . கார்ப்பரேட் துறை எங்களை ஏற்கனவே அழித்து வருகிறது.இன்னும் 2 நாட்களுக்குள் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், எங்களது வாகனங்களை சாலைகளில் இருந்து வெளியேற்றி வரும் 3-ந்தேதி முதல் டாக்சிகளை இயக்க வேண்டாம் என்று நாடு முழுவதும் உள்ள ஓட்டுனர்களுக்கு வேண்டுகோள் வைத்து இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Exit mobile version