நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20 % வரை குறைக்க வாய்ப்பு: மத்திய கல்வித்துறை அமைச்சர் தகவல்

நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20 % வரை குறைக்க வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அடிப்படையில் மாணவ்ர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான ( 2020 – 2021 ) நீட் மற்றும் JEE தேர்வுகள் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இணையவழியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது,பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து நீட் மற்றும் JEE பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து தற்போது நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டமானது 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்

Exit mobile version