பிச்சை எடுங்கள், திருடுங்கள், ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவித்தார்.
மேலும், டெல்லியில் நாளொன்றுக்கு கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவருகிறது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மத்திய அரசு ஆக்சிஜன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது மத்திய அரசின் அடிப்படை கடமை. ஆக்சிஜன் இல்லையா ? அதை போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தெரிவித்தது.
மேலும், தொழிற்சாலைகளை பற்றி கவலைப்படும் மத்திய அரசு, மனித உயிர்களை பற்றி ஏன் கவலை படவில்லை. தொழிற்சாலைகளில் தயாரிக்கும் ஆக்சிஜன்களை கேட்டு வாங்கி தாருங்கள் என்றும் கடுமையாக சாடியது.