ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி,

கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து,  பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை  மத்திய  அரசு நீட்டித்து வருகிறது.  அந்த வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

Read more – கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் : தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் 

இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசமும் முடிவடையும் நிலையில் இருப்பதால் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version