6 ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பாடம் புரியவில்லை, கோவத்தில் கொடூரமாய் தீ வைத்த தந்தை ..

தனது 6 ம் வகுப்பு மகன் சரியாக படிக்கவில்லை என்று அவனது தந்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்:

தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள குஹட்பல்லி பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் சரண் (11) கொரோனா பரவல் காரணமாக வீட்டிலையே ஆன்லைன் மூலம் 6 ம் வகுப்பு படித்து வருகின்றான். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சரண் தனது தாயுடன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பாலு தனது மகன் சரணை அருகில் உள்ள கடைக்கு சென்று பீடி வாங்க அனுப்பியுள்ளார்.

சிறுவன் சரண் பீடி வாங்கிக்கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்துவிட்டு மீண்டும் டிவி பார்க்க, கோபமடைந்த மகன் சரியாக படிக்கவில்லை என்றும் டியூசன் வகுப்புகளிலும் சரியாக பங்கேற்கவில்லை என்று கூறி கடுமையாக தாக்கி உள்ளார். தடுக்க வந்த தாயையும் பாலு தாக்க, ஆத்திரம் அடங்காத பாலு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுவன் சரண் மீது ஊற்றி பீடி பத்தவைத்த தீக்குச்சியில் மகனை கொளுத்தியுள்ளார்.

Read more – இன்றைய ராசிபலன் 19.01.2021!!!

தீப்பற்றிய சிறுவன் சரண் அலற, தாயும் அதிர்ச்சியில் கத்தினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீப்பற்றி எரிந்த சிறுவன் சரணை தீக்காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தை பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுவன் சரண் 60 சதவிகிதம் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Exit mobile version