லக்கீம்பூர் வன்முறை உயிரிழப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச அரசின் அறிக்கை மீது திருப்தி இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
டெல்லி, உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீதான வன்முறை மற்றும் உயிரிழப்பு தொடர்பான நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இரண்டாவது முறையாக இன்று விசாரணக்கு வந்தது. அப்போது உ.பி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சல்வே, லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரதரதில் சம்பந்தமுடையதாக கூறப்படும் ஆஷிஸ் மிஷ்ரவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இன்று நேரில் ஆஜராகவில்லை என்பதால் நாளை காலை 11 மணி வரை அவருக்கு அவகாசம் வழங்கி உள்ளோம். அப்போதும் அவர் ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுக்களை வேறு ஒருவர் சந்திக்கிறார் என்றால் அவருங்கு இப்படித்தான் அழைப்பு விடுத்து மரியாதை கொடுத்து கொண்டு இருப்பீர்களா? அந்த நபரை இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் இச்சம்பவம் மோசமாக நடந்திருக்கிறது; 8 பேர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச்சூடு, நடந்திருக்கிறது இத்தனை தீவிரமான விசயத்தை இப்படி தான் கையாளுவீர்களா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உத்தர பிரதேச அரசும், காவல்துறையும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த உ.பி. அரசு தரப்பிலான வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே, சம்பந்தப்பட்ட நபருக்கு நாளை காலை வரை நேரில் ஆஜராக வாய்ப்பு கொடுத்துள்ளதால் ஒருநாள் மட்டும் எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302ன் ( கொலை வழக்கு ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு நீங்கள் அழைப்பானை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படி தான் நீங்கள் நடந்து கொள்வீர்களா? என மீண்டும் கேள்வி எழுப்பியதோடு, உத்தரபிரதேச அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.மேலும், லக்கீம்பூர் விவகாரத்தில் உ.பி. அரசின் அறிக்கை மீது திருப்தி இல்லை எனவும், அறிக்கையில் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ,சிறப்பு புலனாய்வு விசாரண நடத்துவதாகவும் கூறப்பட்டாலும் அது வெறும் அறிக்கை வடிவில் வார்த்தைகளிலேயே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை என்றனர். இச்சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதா ?
எனவும் வினவினர், அதற்கு உத்தர பிரதேச அரசு தரப்பில் சி.பி.ஐ விசாரணையை மாநில அரசு கோரவில்லை!!
அதேவேளையில் இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது என்பதால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே, அந்த விசாரணையில் திருப்தி இல்லை என நீதிமன்றம் கருதினால் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது என்பது உங்களுக்கும் தெரியும்!! எனவே வேறு விசாரணை அதிகாரிகளை தான் பார்க்க வேண்டும். எனவே தற்போதைய நிலையில் மாநில அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரம் ஆவணங்கள் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை காவல்துறை டி.ஜி.பி.யிடம் அறிவுறுத்துங்கள் என உ.பி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் விசாரணையும், நடவடிக்கை இருக்கும், தேவைப்பட்டால் மாற்று விசாரணை அமைப்பு வைத்து வழக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றத்தில் உ.பி அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் உ.பி. காவல்துறையின் உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து பாதுகாபாப்பு உறுதி செய்யப்படும் எனவும் உத்தர பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உத்தரவாதம் அளித்துள்ளார். உ.பி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை ஏற்று இந்த வழக்கு தசரா விடுமுறைக்கு பின்னர் உடனடியாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்து வழக்கை நீதுபதிகள் ஒத்திவைத்தனர்.