ஒருநபர் 77 முறை விதிமீறல்…. 2 மீட்டர் நீளத்தில் பில்… ரூ. 42,000 அபராதம் வசூல்!

போக்குவரத்து விதிமீறலுக்காக பில் மட்டுமே 2 மீட்டர் நீளத்தில் உள்ளது. அந்த அபர் மீது 77 முறை விதிமீறலில் ஈடுபட்டதாகவும் அதனால் சுமார் ரூ.42,000 ஸ்பாட் பைனாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு கடுமையான  அபாரத்தொகையை வசூலிக்க உத்தரவிட்டது.

இதனால் மக்கள் கொதிதெழுந்தனர். பின்னர் அந்தந்த மாநில அரசுகளே போக்குவரத்து விதிகளுக்கு ஏற்ப அபராதத்தொகையை வசூலிக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுபோதையில் தவறான திசையில் வந்து  பைக்கிலேயே தூங்கிய நபருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

இன்னொரு நபருக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக பில் மட்டுமே 2 மீட்டர் நீளத்தில் உள்ளது. அவர் 77 முறை விதிமீறலில் ஈடுபட்டதாகவும் அதனால் சுமார் ரூ.42,000 ஸ்பாட் பைனாக விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள மடிவாளா போக்குவரத்து போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,  அருண்குமார் என்பர் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது, அதிவேகத்தில் பயணித்தது என 77 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது தெரியவந்தது.  இதுதொடர்பாக ரூ.42000 அபராதம் செலுத்த வேண்டுமெனக் கூறி அவருக்கு ரசீது 2 மீட்டர் நீளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version