தகவல் தொடர்பு செயலிகளுக்கு விதிமுறைகள் தேவையில்லை!!

வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல் தொடர்பு செயலிகளுக்கு கட்டுப்பாட்டு  விதிமுறைகள்  இப்போது தேவையற்றது  என டிராய்  அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற தகவல் தொலைத்தொடர்பு செயலிகளால்  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வருவாய்  பாதிப்புக்கு  உள்ளாவதாக  சில  வருடங்களாகவே குற்றம்சாட்டி  வருகின்றது.  எனவே,  இதுபோன்ற செயலிகளின் சேவைகளில் தலையிட்டு அவற்றின் முழுமையான செயல்பாடுகள்  தொடர்பாக கட்டுப்பாட்டு விதிமுறைகள்  மேற்கொள்ள வேண்டும்  என்று தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பிற்கு நிறுவனங்கள்  கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.

இதனிடையே இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள டிராய் அமைப்பு,  இதுபோன்ற தகவல் தொலைத்தொடர்பு செயலிகளுக்கென தனியாக கட்டுப்பாட்டு  முறைகள் தற்போதைக்கு  தேவை இல்லாத ஒன்று என கூறியுள்ளது.  இதில் இத்தகைய செயலிகளின் சேவைகளின் பாதுகாப்பு  சம்பந்தமான விவகாரங்களிலும் ஒழுங்கு நடவடிக்கை காண கண்காணிப்பு மற்றும் தலையீடு  போன்றவைஇப்போதைக்கு  அவசியமில்லாதது என டிராய் அமைப்பு  கூறியுள்ளது.

பேஸ்புக் ,கூகுள், வாட்ஸ் அப்,போன்ற தகவல் தொடர்பு செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க படலாம் என  எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில்,  தற்போது இந்த நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக டிராயின் இந்த அறிவிப்பு  வெளியாகி உள்ளது .

Exit mobile version