மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கடந்த 2-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை முடிந்து குணமடைந்த அவர், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் சுவாசிப்பதில் சிரமம் , உடல் சோர்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எனவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.