‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜிப்மரின் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ஜூன் 15 முதல் 17, 2025 வரை புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். ஜூன் 16 ஆம் தேதி, ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஜூன் 17 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் விதமாக, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தரான திரு ஜக்தீப் தன்கர், அப்பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடுவார்.
