தடை செய்யப்பட்ட பட்டாசு மத வழிபாடுகள் திருவிழாக்கள் அரசியல் கூட்டங்கள் திருமணங்கள் போன்றவற்றில் தற்போது கூட வெடிப்பதை பார்க்கிறோம் தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகள் எதற்காக தயாரிக்கிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி,
கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்துவதன் காரணமாக பட்டாசுகளை உற்பத்தி செய்ய கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பது பட்டாசுகளை வெடிக்கும் கால நேரம் ஆனது உச்சநீதிமன்றத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டது அதன்படி தீபாவளி பண்டிகையின் போது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அதுவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என மொத்தம் எட்டு மணி நேரம் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம் ஆர் ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிய மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், பட்டாசு உற்பத்தி பட்டாசு வினியோகம் பட்டாசுகளை பத்திரப்படுத்துதக் ள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் குறிப்பாக பேரியம் ஆக்சைடு பயன்படுத்தக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் ஒன்று ஆனால் இந்தியாவில் தயாரிக்க படக்கூடிய பட்டாசு வகைகளில் 5பட்டாசு மட்டும் தான் உச்சநீதிமன்றம் சொன்னது போல பசுமை பட்டாசாக இருக்கிறது 300-க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் கொல்கத்தா மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இது உறுதியாகி இருப்பதாகவும் கூறினார்
மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீண்ட நேரம் வெடிக்கக்கூடிய சரவெடி களைத் தயாரிக்க கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஆனால் மத வழிபாடு சமயங்களிலும் திருவிழாக்களின் போதும் அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டங்களின் போதும் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுதும் திருமணங்களின் போதும் இந்த சரவெடிகள் அதிக அளவில் வெட்கப்படுவதை நாங்கள் இன்றுகூட பார்க்கிறோம் அப்படி என்றால் தினம்தோறும் எங்களது உத்தரவுகள் மீறப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாங்கள் சிறிய அளவிலான பட்டாசுகளை தான் தயாரிப்பதாகவும் பொதுமக்கள்தான் அதனை ஒன்றாக இணைத்து பெரிய வீடுகளாக மாற்றி கொள்வதாகவும் கூறினார். மேலும் ஒரு சிலர் மட்டும்தான் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிப்பதாகவும் இதனால் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்திக்கும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமானோர் வேலையில் இருப்பதாகவும் கூறினார்
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் நீங்கள் ஏன் விதிமுறைகளுக்கு மீடியா பட்டாசுகளை தயாரிக்கிறாரகள் என கேள்வி எழுப்பினர் நிறைய பேர் வேளையில் அங்கு இருப்பதை நாங்களும் ஏற்கிறோம் ஆனால் அதற்காக ஒரு சிலரால் ஏராளமானோர் சுகாதாரமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை இழப்பதை ஏற்கமுடியாது. பட்டாசினால் ஏற்படும் கடுமையான காற்று மாசினால் ஏராளமான அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் பொது மக்களின் சுகாதாரத்தில் தங்களால் சமரசம் செய்ய முடியாது என நீதிபதிகள் கூறினர் இதனையடுத்து இன்றைய அலுவல்கள் நிறைவடைந்தை அடுத்து வழக்கின் விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.