இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டதாரியா நீங்க? அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்!!

தலைமை தொழில்நுட்ப அலுவலர், மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI)  வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 04

நிறுவனம் : உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI)

வேலை இடம்: புது தில்லி

பதவி மற்றும் காலியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fssai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant Director, Human Resource Division, Room No.407, Food Safety and Standard Authority of India, FDA Bhwan, Kotla Road, New Delhi- 110002

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :31.08.2020

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள www.fssai.gov.in என்ற இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version