இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து, தான் ஓய்வுபெற்றதாக அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த பி.வி.சிந்து மிக இளம் வயதிலேயே, பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து, உலக சாம்பியன் தொடரில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனையும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடருடன் தான் ஓய்வு பெற்றதாக, பி.வி.சிந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கொரோனா காரணத்தால் அந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பாக பி.வி.சிந்து திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அப்போது, அவரது குடும்பத்துடன் ஏதோ மனக்கசப்பு என சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், ட்வீட்டர் பக்கத்தில் வெளியான கடிதத்தில் இறுதியில் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பி.வி.சிந்து ட்விஸ்ட் அடித்துள்ளார்.