கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் வேலை.. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Stenographer – 01

சம்பளம்: மாதம் ரூ.25,200 – 81,100

பணி: Forest Guard – 02


வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technician – 03

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வலையில் DIRECTOR, IFGTB என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: The Director, Institute of Forest Genetics and Breeding, Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Post Box No.1061, Coimbatore, Tamilnadu, PIN – 641002

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2020

மேலும் விவரங்கள் அறிய http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Exit mobile version