ஐபிஎல்: பாரபட்சம் பார்க்காத மும்பை.. டெல்லியை பொளந்து கட்டி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில், மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். இதன் மூல அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களை சேர்த்தார். மும்பை தரப்பில் பும்ரா மற்றும் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீரர்கள் டீ காக் மற்றும் இஷான் கிஷான் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 68 ரன்களை சேர்த்தது. 28 பந்துகளில் 26 ரன்களை சேர்த்த டீ காக், நோர்ட்ஜே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷான், தனது அரைசதத்தை நிறைவு செய்து 72 ரன்களை சேர்த்தார். அவருடன் சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 12 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி 14.2 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு தொடரில் மும்பை அணியின் 9வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி, லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், டெல்லி அணி, பெங்களுர் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் கட்டாயமாக வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Exit mobile version