12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?.. உங்களுக்கான வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தீயணைப்பாளர் பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தீயணைப்பாளர்

காலிப் பணியிடங்கள் : 03

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :
10, 12-வது தேர்ச்சி பெற்று தீயணைப்புத் துறையில் 8 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.25,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://npcilcareers.co.in/ என்ற இணையதளம் மூலம் 24.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : உடல் தர சோதனை மற்றும் உடல் மதிப்பீடு மற்றும் பொறையுடைமை சோதனைகள் மற்றும் ஓட்டுநர் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version