TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு

குரூப் 4 தேர்வில், ஏற்கனவே 7301 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்கனவே 7,301 பணியிடங்கல் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக சுமார் 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது ஆக மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரோ/ நேர்காணலுக்கு (counselling) அழைக்கப்படுவதற்கு முன்னரோ காலிப் பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னரே, காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டால், மூலச் சான்றிதழ் மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும். காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், கட் ஆப் மதிப்பெண்கள் குறையத் தொடங்கும். எனவே, தற்போது கட்- ஆப் மதிப்பெண்களில் விளிம்புநிலையில் இருக்கும் தேர்வர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.

Exit mobile version