நூற்றுக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ள தேசிய விதை கழக நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமா!!

தோட்டக்கலை, மேலாண்மை பயிற்சி, மனித வளம்,  விவசாயம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, தேசிய விதை கழக நிறுவனம் (NSCL) வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 220

நிறுவனம் : தேசிய விதை கழக நிறுவனம் (National Seeds Corporation Limited – (NSCL))

பதவி மற்றும் காலியிடங்கள் : 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது தளபதிக்கு 25 முதல்    30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை : கணினி அடிப்படையிலான சோதனை / நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித் தகுதி : எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும், அததற்குரிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.indiaseeds.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version