எனது விந்தணுவுக்கு அதிக அளவு போட்டியுள்ளது என எலான் மஸ்க்கின் தந்தை எரோல் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
உலக கோடிஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க்.( டெஸ்லா கார் முதல் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வரை அனைத்தும் இவருக்கு அத்துப்படி) இவரின் தந்தை எரோல் மஸ்க், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது 35 வயது வளர்ப்பு மகளுடன் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டார் என சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது. இந்நிலையில், 76 வயது தென்னாப்பிரிக்க என்ஜினியரான அவர், மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது, “நாம் பூமியில் இருப்பதற்கு ஒரே காரணம் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே” என்று நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும், உயர் வர்க்க கொலம்பியன் பெண்களை கருவுறச்செய்ய எனது விந்தணுவை தானம் அளிக்கச்சொல்லி கொலம்பியன் நிறுவனம் ஒன்று என்னை அணுகியது. இதற்காக எந்த தொகையையும் வழங்குவதாக அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. அதற்கு ஈடாக முதல் வகுப்பு பயணம் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி உள்பட பல சலுகைகளை வழங்க முன் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எலானை உருவாக்கியவரே இருக்கும்போது எலானிடம் ஏன் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
1979ம் ஆண்டு எலான் மஸ்கின் தாயார் மாயே ஹல்தேமனை பிரிந்தபிறகு எரோல், ஹைதீ பெசுந்தேன்ஹெளட் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டார். ஹைதியின் குழந்தைதான் ஜனா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜனாவிடம் இருந்து 2019ம் ஆண்டு பெண்குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு எரோலும் ஹைதீயும் விவாகரத்து பெற்றுக்கொண்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
