கடும் குளிர்- காஷ்மீராக மாறிய ஊட்டி; ஊட்டியாக மாறிய சென்னை

வடகிழக்கு பருவமழை காலமான தற்போது, மழைக்கோட் போட்டுக்கொண்டு வெளியே செல்லும் பொதுமக்கள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெளியே செல்வதை பார்க்க முடிகிறது. சென்னையில் வழக்கமாக கடும் குளிர் நாட்களில் கூட லேசான குளிர் இருப்பதே வழக்கம். அதுவும் பின் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மட்டுமே. ஆனால், சில நாட்களாக மதிய வேளையில் கூட கடும் குளிர் நிலவுவதை பார்க்க முடிகிறது. இதுவரை சென்னையில் இதுபோன்ற குளிரை பார்த்ததில்லை எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடைசியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு 1815ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மைனஸ் 3 டிகிரி குளிர் இருந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் வெளிவந்துள்ளன. சென்னைக்கு இந்த நிலை என்றால் எப்போதும் குளிரில் இருக்கும் உதகைக்கு என்ன நிலை என்று யோசிக்க முடிகிறதல்லவா. அங்கும் நிலைமை மோசமாகவே உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்நிலையில் உதகை, தலைக்குந்தா, குதிரைபந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைபனி பொழிவு காணப்பட்டது. உதகைப் பகுதி மினி காஷ்மீர் போலத் தோன்றியது முன்நாள் இரவே தொடங்கிவிடும் உறைபனிப் பொழிவு காலை 9 மணி வரையிலும் நீடிப்பதால் பகல் நேரத்திலும் கடுங்குளிர் நிலவி வருகிறது.

இதனால் சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், நீர்நிலைகள்,பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. குளிரால் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை #ChennaiSnow என்ற ஹாஷ் டேக்கின் கீழ் சென்னைவாசிகள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version