ரஜினியுடன், பிரக்னாநந்தா வைரலாகும் புகைப்படங்கள்

ஜூனியர் செஸ் உலகச் சாம்பியன் பிரக்னாநந்தா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “இந்த நாள் என் வாழ்வில் மிகச்சிறப்பான நாள்; ரஜினிகாந்த் அங்கிள், எனது குடும்பத்துடன் சில மணி நேரங்களை செலவிட்டார். பெரிய உயரங்களை எட்டியபோது அவரின் தன்னடக்கம் எனக்கு  மிகப்பெரும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. மரியாதை, மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Exit mobile version