அடியே வெளியே வாடி – கணவனின் காரிலிருக்கும் பெண்ணை வெளியே வரச்சொல்லி நடுரோட்டில் தகராறு செய்த பெண்!

மும்பை நகரத்தின் பெட்டர் சாலை என்னும் பகுதியில் தம்பதி இருவர் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் தனது கணவர் வந்த ரேஞ்ஜ் ரோவர் காரை தடுத்து நிறுத்திய அவரது மனைவி, காருக்குள் வேறு ஒரு பெண் இருப்பதாகவும், இருவரும் உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், கணவர் காரின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்ட அந்த பெண், செருப்பை கழற்றி கண்ணாடியின் மீது அடித்துள்ளார். தொடர்ந்து, கதவு வழியாக கணவரை அடிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

காரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டுஅந்த பெண்ணை வெளியே இறங்கி வர சொல்லி ரகளை செய்துள்ளார். அந்த பெண்ணின் செயலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version