அன்புள்ள அக்காவிற்கு

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 70 அன்புள்ள அக்காவிற்கு

அன்புள்ள அக்காவிற்கு,

நலம். நலமறிய அவா. நான் நேராக விஷயத்திற்கு வருகிறேன் அக்கா. நீ

என்னை கல்யாணம் பண்ணிக்க கொள்ள சொல்லி அடிக்கடி கூறுவாய்.

இப்போது “நானே ஒருத்தரை விரும்புகிறேன். எனக்கு கல்யாணம் பண்ணி

வையுங்கள்” என்று சொல்லும் போது “அந்த பையன் வேண்டாம்” என்று

சொல்கிறீர்கள். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லோரும் சமம் தானே அக்கா .அவர் தாழ்த்தப்பட்டவர் என்று தானே எல்லோரும் வேண்டாம் என்று

சொல்கிறீர்கள்.

உங்களுக்கு இப்போது நான் ஒரு முக்கியமான ரகசியத்தை சொல்கிறேன்.

எனக்கு “hypersexual disorder”. அப்படியென்றால் என்னவென்று தெரியுமா

அக்கா ?! கட்டுப்பாடு இல்லாத பாலியல் உறவு. காதலிக்க வேண்டிய

காலத்தில் காதலிக்காமல் விட்டுவிட்டதால் நோய்வாய்ப்பட்டு விட்டேன்

.அழகான செல்வந்தர் வேண்டும் என்று பேராசைப்பட்டு வந்த வரன்களை

எல்லாம் உதறி தள்ளினேன். அதே காரணங்களுக்காக காதலிக்கவும் மறுத்தேன். இப்போது புரிகிறது காதலிக்காமல் இருந்தது என் தவறு என்று.ஏனெனில் ஒருவரையொருவர் காதலிக்கும் போது சில காலம் சென்ற

பின் அவர்களது உடல் தேவைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். பிறரை

தேடி செல்வதையோ, ஆபாசப் படங்களையோ பார்க்க மாட்டார்கள்.காதலின்

வழியே களவொழுக்கம் பேணப்பட்டிருக்கும். ஆனால் என்னைப் போல

காதலிக்காமல் வளர்ந்த ஒருவர் தனது உடல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆபாசப்படங்களை பார்ப்பார். நானும் அப்படி தான் ஆபாசப்படங்களை

பார்த்தேன். இங்கு காமம் உணர்வற்றதாகிவிடுகிறது. நானும் நெடுநாட்கள்

ஆபாசப்படங்களை அதிகம் பார்த்ததால் மற்றவர்கள் பேசுகிற சொற்கள்

மற்றும் சொற்றொடர்கள் எல்லாம் இரட்டை அர்த்தமாக தெரிகிறது .

யாரையும் கண்ணியமாக நிமிர்ந்துப் பார்த்து பேச கூட முடியவில்லை .

எல்லாரும் ஆடை இல்லாமல் தெரிகிறார்கள். இயற்கையாக எழ வேண்டிய காமம் என்னும் உணர்வு இப்படி காதல் இல்லாத வெறும் இயந்திரத்தனமான

உணர்வாகிவிட்டது.

நானும் இயந்திரம் போல ஆகிவிட்டேன்.அந்த சூழலில் தான் இவரை சந்தித்தேன். காதல் வயப்பட்டேன்.முதலில் என்னை மறுத்தவர் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று தெரிந்ததும் என்னை கல்யாணம்

செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

என்னை காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை கூறவில்லையெனினும்

அவரது செயல்களே அவரது மனதுள் வைத்திருந்த என் மீதான காதலை

வெளிப்படுத்திவிட்டது. அன்றும் கூட நான் அவரிடம் என் காதலை சொன்ன பொழுது என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆணவ கொலைக்கு நான்

பலியாகி விடுவேனோ என்று பயந்து தான் .அந்த சமயத்தில் அவரை மறக்க முடியாமல் என் நெருங்கிய தோழியிடம் இது

பற்றி கூறினேன். அவள் கொடுத்த திட்டப்படி இவரை மறக்க வேறொருவருடன் பழகினேன். ஒரு ஆண் நண்பர் பின்னர் ஐந்தாகி போனது.

அவர்கள் என் புகைப்படத்தை வைத்து என்னை மிரட்டிய போது என்னை காப்பாற்றிக் கொள்ள அவரிடம் சென்றேன் .அவர் தான் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றினார். அந்த பிரச்சினை முடிந்தாலும் வேறு பிரச்சினை அப்படியே இருந்தது . அது என்ன தெரியுமா அக்கா! என்னுடைய

காமவெறி. அதை என்னால் அடக்க முடியவில்லை . நான் பலருடன் பழக

விருப்பப்பட்டேன். அப்போதும் அவர் தான் என்னை காப்பாற்றினார் .

அவருடைய உளவியலாளர் தோழியிடம் என்னை கூட்டிச் சென்றார். என்னை

பரிசோதித்த அவர் எனக்கு “hypersexual disorder ” இருக்கிறது என்று சொன்னார்.

அதை கேட்ட அவர் அப்போதே ஒன்று சொன்னார் ,” நான் உன்னை கல்யாணம்

செய்து கொள்கிறேன் !” என்று. ஒரு ஆண் தனக்கு வரப்போகும் மனைவி

அழகாக, நல்லவளாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று யோசிக்கும் இந்த

காலத்தில் நற்பண்புகள் ஒன்று கூட இல்லாத என்னை அவர் கல்யாணம்

செய்து கொள்வதாக கூறினார்.

அது மட்டுமல்ல அவர் என்னை நல்வழிப்படுத்தும் போதெல்லாம் என் காம இச்சையை போக்க முடியாமல் அவரையும் , அவர் குடும்பத்தையும்

கேவலமாக திட்டினேன். ஆனால் அவரோ என்னை இந்நாள் வரை ஒரு இழிசொல் கூட கூறியதில்லை .

காதல் என்றால் காமம் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை காதல்

என்றால் ” ஒரு கஷ்டம் வரும் பொழுது தனது துணையை பிரியாமல் , தன்

துணைக்கு பக்கப்பலமாய், உற்ற துணையாய் நிற்க வேண்டும் “என்று

உணர்த்தியவர் அவர் தான். அவருடைய உடல் தேவையை , சுகத்தை கூட

தியாகம் செய்து மேலே சொன்னபடி வாழ்ந்து காட்டுபவர் அவர்.

நான் திருந்த முடியாமல் தவித்த போது என்னை யோசிக்க வைத்தார். நிறைய

எழுத வைத்தார். அப்படி செய்ய வைத்து என் நோயின் கருப்பொருள் எது என

யோசிக்க வைத்தார். காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து

கொள்ள வைத்தார்.

நான் புரிந்து கொண்டவை :

● ஆபாசப்படங்களை பார்ப்பது முற்றிலும் தவறானது.ஏனெனில் கணவன்

மனைவிக்குள் ஏற்படும் காதலால் உடல்தேவைகள் தீர்வதை அவர்கள்

குறைவாகவே காட்டுகிறார்கள்.

● மேலும் ஆபாசப்படங்களில் பிறரது மனைவியை அல்லது பிறரது கணவரை அல்லது அம்மா – பையன் , சித்தப்பா- மகள், சித்தி-மகன்,

தாத்தா -பேத்தி, பாட்டி – பேரன் என்று எந்த வரைமுறையும் இல்லாமல்

எல்லோரும் எல்லோருடனும் காமவெறியை தீர்த்துக் கொள்வதயே

அதிகம் காட்டுகின்றனர். இதையே நெடுங்காலமாய் பார்ப்பவர்

உறவுகளின் உன்னதத்தை எப்படி உணர்வார்.

● காதலில் காமம் கூட காதலாகவே உணரப்படும். எனவே காதலிக்க

வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும்.

● காதல் இல்லா காமம் சுயநலமானது. காம சிந்தனைகள்

ஆரோக்கியமற்றது.

● காமம் வெறும் உடற்கவர்ச்சியால் ஏற்படுவது .நம் சுயமரியாதையை

கூட  இழக்க செய்வது.

இவ்வாறு சொல்லிக் கொண்டே செல்லலாம். உனக்கு தெரியுமா அக்கா

இப்பொழுதெல்லாம் எனக்கு அழுகையே வருவதில்லை . அந்த அளவு என் மனது ஆபாசப்படங்களை பார்த்து சிதைந்து விட்டது. இனியாவது

நான் களவொழுக்கத்தை பின்பற்றி திருந்தி வாழ என்னை அவருக்கு

மணமுடித்து வையுங்கள் அக்கா.

இப்படிக்கு

என்றும் அன்புடன்,

உன் தங்கை .

Exit mobile version