ஐம்பது பைசா – கா.முத்துக்குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 89 ஐம்பது பைசா கா.முத்துக்குமார்

அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருக்கிறான்,

 தூரத்திலிருந்து ஒரு பாட்டி ஏ…ஐயா…. மாரித்துரை….இங்க வாயா என்று அழைக்கிறார்,

மாரித்துரை ஒரு கோழிக்காவை அடிக்க குறி வைக்கிறான்,

அவனது நண்பன் டேய் உங்க பாட்டி கூப்பிடுறாங்க டா என்று கூறுகிறான்.

மாரித்துரை தான் வைத்த குறியை மாற்றி பாட்டி இருக்கும் திசை திரும்பி என்ன பாட்டி என்ன… என்று சத்தமாக கேட்கிறான்,

பாட்டி; இங்க வாயா கடைக்கு போயிட்டு வாயா,

மாரித்துரைக்கு ஒரே சந்தோஷம் மளிகைக் கடையில் புதிதாக வந்திருக்கும் கடலை மிட்டாயை இன்றைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே பாட்டி இருக்கும் திசை நோக்கி வேகமாக ஓடிச் சென்று பாட்டியிடம் என்ன பாட்டி, என்ன வாங்கணும் என்று மூச்சு வாங்கியபடி கேட்கிறான்.

பாட்டி; முதல்ல மூச்சு வாங்குயா அப்பறமா கடைக்கு போய்ட்டு எனக்கு வெத்தலையும், பாக்கும் வாங்கிட்டு வாயா.

மாரித்துரை; பாட்டியிடம் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு மளிகைக் கடைக்கு ஓடுகிறான்.

மளிகைக் கடைக்குச் சென்று வெத்தலையும், பாக்கும் கொடுங்கள் என்று  ஒரு ரூபாயை நீட்டி  கேட்கிறான.

கடைக்காரர்; என்னப்பா என்ன கேட்ட என்று மாரித்துரையை பார்த்து கேட்கிறார்.

 மாரித்துரை சலிப்புடன்  வேத்தலையும்,பாக்கும் குடுங்க என்று சத்தமாக கேட்கிறான்.

கடைக்காரர்;  முக்கா ரூவா கொடுப்பா என்கிறார்.

மாரித்துரை மீதிகாசுக்கு கடலை மிட்டாய் வாங்கிவிடலாம் என்று சந்தோசமாக தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான்.

இந்தாப்பா வெத்தலையும், பாக்கும், மிச்சம் 25 பைசா என்று கடைக்காரர் கொடுக்கிறார்,

மாரித்துரை 25 பைசாவிற்கு அந்த கடலை மிட்டாய் குடுங்க, என்று தன் கையை நீட்டி ஆசையாய்   கேட்கிறான்,

கடைக்காரர்; தம்பி கடலை மிட்டாய் 50 பைசா இன்னும் 25பைசா குடு என்கிறார்.

மாரித்துரை; அண்ணா  என்கிட்ட காசு இல்ல, மிச்ச 25 பைசா எங்க அம்மா வந்ததும் வாங்கித்தாறேன்,இந்த 25 பைசாவை வைத்து கொண்டு கடலை மிட்டாய் குடுங்க என்கிறான்,

கடைக்காரன்; தம்பி இப்பதான் கடை திறந்தேன் முதல் போனியே  கடன் கொடுக்க முடியாதுப்பா என்கிறார்,

மாரித்துரை 25 பைசாவை எடுத்து கொண்டு மெல்ல நடந்து அங்கு இருந்து கிளம்புகிறான்,

கடைக்காரர்; தம்பி என்று கூப்பிடுகிறார் , மாரித்துரை மெல்ல திரும்புகிறான்,

கடைக்காரர்; தம்பி உங்க அம்மா 50பைசா பாக்கித்தரணும் அத வாங்கிட்டு வாப்பா என்கிறார்,

 மாரித்துரை மெல்ல தலை அசைத்து அங்கிருந்து கிளம்புகிறான், இந்தா பாட்டி நீ கேட்ட வெத்தலையும்,பாக்கும் என்று 25 பைசாவுடன் நீட்டுகிறான்,

பாட்டி; மிச்ச துட்ட நீயே வச்சுக்கோப்பா என்கிறார், மாரித்துரை; பாட்டி உன்கிட்ட வேற 25 பைசா இருக்கா என்று கேட்கிறான்,பாட்டி; இல்லப்பா இருந்த ஒத்த ரூபாயத்தான் உன்கிட்ட குடுத்து விட்டேன் என்கிறார்,

மாரித்துரை; சரி பாட்டி, அம்மா எப்போ வருவா,

பாட்டி; உங்க  அம்மா கட்டிட வேலைக்கி போயிருக்கா இன்னைக்கி சிக்கிரம்மா வந்துறுவாயா என்கிறார், மாரித்துரை; ம்ம்…. சரி பாட்டி என்று கடலை மிட்டாயை மறந்து விளையாடச் செல்கிறான், விளையாட்டு மைதானத்தில் சூரியனின் தாக்கம் மட்டுமே இருந்தது அவனின் நண்பர்கள் ஒருவர் கூட அங்கு  இல்லை சரி வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு   வீட்டிற்கு கிளம்புகிறான்.

வீட்டினுள் நுழைகிறான்,பாட்டி,பாட்டி   என்று அழைத்தவாறு ஆனால் அங்கு, தூங்கும் இடத்தின் அருகிலேயே சமைக்கும் இடம் உள்ளது பாட்டி வீட்டில் இல்லை, மாரித்துரை சோற்றுபானையை  உற்றுப் பார்க்கிறான் அப்பானையில் சோறு கொஞ்சம் உள்ளது,பின்னர் குழம்பு பானையை பார்க்கிறான் அதில் குழம்பு சோற்றை விட குறைவாக இருந்தது சற்றும் சிந்திக்காமல் சோற்றை குழம்புப் பானையில் தட்டி கரண்டியால் சோற்றை வேகமாக நான்கு,ஐந்து முறை பிரட்டி,பிரட்டி எடுத்தான்  அவனின் வேகத்தில் சட்டைப் பையில் இருந்த 25பைசா கீழே விழுந்தது அதை உற்றுப்பார்த்து கொண்டே… இச்சே… இன்னொரு 25 பைசா இருந்தா கடலை மிட்டாய் வாங்கி இருக்கலாமே! என்று  சிந்தித்து  கொண்டு  உணவை தட்டில் தட்டி உணவு உண்ண தரையில் அமர்ந்தான், உணவு உண்ணும் போதும் 25 பைசவை பார்த்தவாறு இன்னைக்கி அம்மா வந்ததும் 25 பைசா வாங்கி கடலை மிட்டாயை வாங்கிரணும் என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடிக்கிறான்,

பின்னர் தரையில் படுத்துக்கொண்டு 25 பைசாவை சுற்றிவிட்டு சுற்றுவதை பார்த்துக் கொண்டே கண்களை மூடித் தூங்குகிறான்.

மாரித்துரையின் அம்மா வேலை செய்யும் இடம், மாரித்துரை அம்மா  வேலைகளை முடித்து விட்டு கையில் இருக்கும் சிமிண்டை கழுவிக்கொண்டு இருந்தார். மற்ற பெண்கள் இரண்டு நாள்  சம்பளம் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள், மாரித்துரை அம்மா முதலாளியை ஐயா என்று அழைத்தார்.

முதலாளி; என்னம்மா எல்லா பொம்பளைங்களும் வேலை முடிச்சுட்டு போயிட்டாங்க நீ எங்கம்மா போயிருந்த,

மாரித்துரைஅம்மா; ஐயா நா ரெண்டாவது மாடியில வேலை செஞ்சேன் அதான் நேரம் ஆகிட்டு என்று பணிவாக சொன்னார்,

முதலாளி; சரிமா,சரிமா.. சம்பளம் நாளைக்கு சேர்த்து வாங்கிக்கோமா என்றார்.

மாரித்துரைஅம்மா ஐயா….என்று இழுத்தார்.

முதலாளி; சம்பளம் கொடுத்த மிச்ச பணத்தை வீட்டிற்கு கொடுத்து அனுப்பி விட்டேன் இப்போ என்கிட்ட பணம் இல்ல நாளைக்கு நானே உனக்கு மறக்காம தாறேன்மா என்றார்.

மாரித்துரைஅம்மா; சரி ஐயா என்று சொல்லி வீட்டிற்கு பகள் முழுவதும் வேலை செய்த சோர்வுடன் கிளம்பினார்,வேலை பார்த்த சோர்வை விட மனதில் உள்ள சோர்வு அதிகமாக அவரின் முகத்தில் தெரிந்தது,மெல்ல நடந்து வீட்டை அடைந்தார்

எய்யா மாரி….. மாரித்துரை என்று அழைத்தவாரு,வீட்டின் வெளிப்புற திண்ணையில் அமர்ந்தார் மாரித்துரை அம்மா,

மாரித்துரை அம்மாவின் சத்தம் கேட்டு 25பைசாவை பார்த்தவாறு வேகமாக எழுந்தான், 25பைசாவை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தான்,

மாரித்துரைஅம்மா; ஐயா இன்னைக்கி விளையாட போகாம தூங்கிட்டிங்களா என்று தன் மகனிடம் கேட்டால்

மாரித்துரை; ஆமாமா…சரி 25 பைசா குடுமா என்று குழைவான குரலில் கேட்டான்,

மாரித்துரைஅம்மா; இன்னைக்கி சம்பளம் கிடைக்களப்பா  நாளைக்கி 50பைசாவா தாறேன்பா சரியா என்கிறார்.

மாரித்துரை; மூஞ்சை தூக்கிவைத்து கொண்டு சரி என்று சொன்னான். மாரித்துரைஅம்மா சப்டியாப்பா.

 மாரித்துரை; ஆம் சாப்பிட்டேன் என்று கூறி, மளிகைக் கடைக்காரர் 50பைசா உன்கிட்ட கேக்க சொன்னாருமா என்று கூறினான்.  மாரித்துரைஅம்மா; ஆமாப்பா நாளைக்கி கொடுத்துரல்லாம் என்றார். மாரித்துரை; சரிமா நா விளையாட போறேன் என்று வேகமாக சோகமாக கிளம்புகிறான், சிறிது தூரம் சென்றதும் சூரிய ஒளியில் தரையில் ஏதோ ஒன்று மினிங்குவது அவன் கண்ணியில் பட்டது என்னவென்று அருகில் சென்று பார்க்கிறான் 50 பைசா கீழே கிடக்கிறது சுற்றி பார்க்கிறான் அங்கு யாரும் இல்லை ஐய்யா……. இன்னைக்கி கடலை மிட்டாய் வாங்கி விடலாம் என்று சந்தோசமாக கூரிக்கொண்டு, அந்த 50 பைசாவை எடுத்துக்கொண்டு  மளிகைக் கடை நோக்கி ஓடத் தொடங்குகிறான்

அவ்வழி வந்த முதியவர் வெயிலின் தாக்கம் தாங்காமல் மயங்கி கீழே விழுகிறார், இதைக் கண்ட மாரித்துரை  ஐயய்யோ…..என்று பெரியவரை நோக்கி ஓடுகிறான், அவரின் அருகில் சென்று தாத்தா…தாத்தா…. என்று சொல்லி அவரை எழுப்ப முயல்கிறான் அவர் எழும்பவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான். நடப்பதை தூரத்தில் கவனித்த அவ்வழியாக வந்த 40 வயது மனிதர் ஒருவர் சோடா வாங்கி  தெளிச்சா சரியாயிடும் பா, என்று அலட்சியமாக கூறினார்.

மாரித்துரை சோடாவா அது எவ்வளவு இருக்கும் என்று அவரிடம் கேட்கிறான், அவர் தெரியவில்லை என்று கூறியதும், கடை நோக்கி ஓடுகிறான் மளிகைக் கடை சென்று சோடா என்ன  விலை என்று   கேட்கிறான்.

கடைக்காரர்; 50 பைசாப்பா என்கிறார்.

மாரித்துரை; சிறிதும் சிந்திக்காமல் ஒரு சோடா குடுங்கள் என்று 50 பைசைவை நீட்டுகிறான்.

கடைக்காரர்; பாட்டிலை பத்திரமாக கொண்டு வந்திருப்பா என்கிறார்.

மாரித்துரை; சரி அண்ணா என்று சோடா வாங்கி வந்து முதியவரை பார்க்கிறான் 40வயது ஆனா மனிதர் அங்கு இல்லை, மாரித்துரை சோடாவிள் உள்ள கோழியை டக்… என்று அழுத்தி அவர் முகத்தில் தெளிக்கிறான் முதியவர் மெல்ல கண்களை விழித்து பார்க்கிறார்.

மாரித்; என்னாச்சி தாத்தா… என்று அவரை மெல்ல எழுப்பி கேட்கிறான்.

வயதானவர் சின்ன மயக்கம்பா வேற ஒன்னும் இல்ல.

மாரித்துரை; சரி தாத்தா பார்த்து போங்க என்று தாத்தாவை வழி அனுப்பி வைக்கிறான்.

அப்பெரியவர்  மெல்ல நடந்து செல்ல… மாரித்துரை கடலை மிட்டாய் கனவை கலைத்து மளிகை கடை நோக்கி காலியான சோடா பட்டிலுடன் நிற்கிறான்.

மாரித்துரையின் நல்ல செயலால் அவன் கனவு பலிக்கவில்லை, ஆனால் நிச்சயம் நாளை அவன் கனவு பலிக்கும்.

************

Exit mobile version