திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் தொடங்கி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து காணொலி வாயிலாக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றனர்.
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.