பிரிட்டனின் அடுத்த பிரதமர் ரிஷி சுனக்? செப்டம்பர் 5-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பி ரிஷி சுனக், பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து அந்நாட்டில்  அடுத்த பிரதமர்  பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இறுதிசுற்று வரை வெற்றி பெற்று இரண்டு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒருவர் ரிஷி சுனக். மற்றொருவர்  லிஸ் ட்ரஸ்.

தற்போது, இந்த இருவரில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். பிரிட்டன் முழுவதும் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கட்சியின் உறுப்பினர்களிடம் இதற்கான இறுதிகட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ரிஷி சுனக்கிற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும், அது எளிதான விசயம் அல்ல. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தவரை லிஸ் ட்ரஸ்ஸிற்கே சற்று அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரிஷி சுனக் வெற்றிபெரும் பட்சத்தில் இந்தியாவை 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தை ஆளும் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். இந்த தேர்தல் முடிவை இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பிரிட்டனின் புதிய பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.

ரிஷி சுனக் பற்றி சில தகவல்கள்:

*இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

* சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் (அவர் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தி பெயரில்)

*2015ல் இங்கிலாந்து பார்லிமென்டிற்கு எம்பியாக தேர்வானார்.

*2020 பிப்ரவரி அந்நாட்டின் நிதியமைச்சராக பதவியேற்றார்.

Exit mobile version