இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரச்சினையில் இருக்கின்ற பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக, மகளிர் உதவி எண் 181 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் இயங்கும் பெண்கள் உதவி மையம் 24/7 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒன்றாகும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள், தொந்தரவுகள் ஏற்பட்டால் தயங்காமல், இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள். ஆலோசகர்கள் உங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவதோடு, உதவியும் செய்வார்கள். மேலும், விவரங்களுக்கு https://tn181whl.org/tamil/
இந்த திட்டம் 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சைல்டு ஹெல்ப் லைன் நம்பர்: 1098. (குழந்தைக் கடத்தல், குழந்தைகள் படிப்பு, வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள், பாலியல் வன்முறை, என குழந்தைகளுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்த சேவை 24 மணிநேரமும் வழங்கப்பட்டு வருகிறது).
பள்ளி மாணவர்களுக்கான உதவி எண்: 14417 (மாணவ, மாணவிகள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், 10-ம் வகுப்பு முடித்து அடுத்தது எந்த குரூப் எடுத்துப் படித்தால் எப்படி எதிர்காலம் இருக்கும் போன்ற தகவல்கள் வழங்கப்படும். மேலும், மாணவர்களுக்குப் பள்ளியில், வகுப்பில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், அவர்களின் கற்றல் குறைபாடு, கவனம் சிதறுதல் போன்ற பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த எண்ணிற்கு பாலியல் வன்முறை தொடர்பாகவும் புகார் தெரிவிக்கலாம்).
