மீட்பு விமானத்தில் கடத்திய 1 கோடி தங்கம் பறிமுதல்…

மீட்பு விமானத்தில் கடத்திய 1 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து மீட்பு விமானம் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் சென்னையின் சர்வதேச விமான நிலையத்தை வந்து அடைந்தது. பின்னர் அதில் வந்த பயணிகளை எப்போதும் போல் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 5 பேரின் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தாரிக், முகமது பாரீஸ், சிக்கந்தர் மஸ்தான், ரகுமான்கான், தஸ்தகீர் ஆகிய 5 பேரையும் விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்து சரியான பதிகள் வராததால் சந்தேகம் வலுவடைந்து அவர்களை தனியறைக்கு அழைத்துசென்று சோதனையிட்டனர்.

அந்த சோதனையில் உள்ளாடை, ஆசனவாயில் மறைத்து தங்க கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட் கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 1 கோடி மதிப்புள்ள 1.85 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version