கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல்…

கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர்.

வடசென்னையில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த தண்டையார்பேட்டை நேரு நகரை சேர்ந்த ராஜேஷ்குமார், வினோபா நகரை சேர்ந்த அண்ணாமலை, நேதாஜி நகரை சேர்ந்த நடராஜன், மாதவரம் பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம், சிட்டி பஜார் பகுதியில் இருந்து சென்னைக்கு காய்கறி ஏற்றிவரும் லாரியில் குட்கா பொருட்களை கடத்தி வந்து, செங்குன்றம் வடபெரும்பாக்கம் தனலட்சுமி நகரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த குடோனில் போலீசார் சோதனை நடத்தி 50 கிலோ ஹான்ஸ், 20 கிலோ ஜர்தா, 30 கிலோ போதை பாக்கு என 100 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version