போலீசாரின் கன்னத்தில் அறைந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ… நான் கூட அவரோன்னு நினைச்சுட்டேன்னு விளக்கம்!!

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றதை தடுத்த போலீஸ்காரரை பாஜக முன்னாள் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி அதை கண்டித்து கர்நாடக மாநிலம் ராய்சூர் நகரில் பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக சிறுபான்மை பிரிவின் ராய்சூர் மாவட்ட தலைவரும், எம்எல்ஏவுமான பாப்பா ரெட்டி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது சித்தராமையாவின் கொடும்பாவியை எரிக்க தொண்டர்கள் முற்பட்டனர். அப்போது காவல் உடை அணியாத மஃப்டி காவலர் ஒருவர், சித்தராமையா உருவப்படங்களை எரிக்கவிடாமல் பாஜகவினரை தடுத்துக்கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்துவிட்டு அவர் அருகில் சென்ற பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பாபாரெட்டி ஓங்கி காவலர் ராகவேந்திரா கன்னத்தில் அறைந்தார்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து மக்களிடையே பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பாபாரெட்டியின் செயலுக்கு கடுமையான விமர்சனங்களும், கண்டனமும் எழுந்தது.

இந்த சர்ச்சைகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாபாரெட்டி பேசுகையில், போலீஸ் உடையில் இல்லாததால் காவலர் ராகவேந்திராவை தனது கட்சித் தொண்டர் என நினைத்து அடித்துவிட்டதாகவும், காங்கிரஸ்காரர்கள் எத்தனையோ முறை பிரதமர் மோடியின் உருவப்படத்தையும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவப்படங்களையும், பொம்மைகளையும் தீயிட்டு எரித்துள்ளதாகவும், ஆனால் அப்போதெல்லாம் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தாது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version