வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
வீட்டை பூட்டி விட்டு தைரியமாக இப்போதெல்லாம் வெளியில் போய்விட்டு வர முடிவதில்லை. வயிற்றில் நெருப்பை தான் கட்டி கொண்டு இருக்கின்றோம். எப்போது வீட்டை பூட்டி கொண்டு இவர்கள் வெளியில் செல்வார்கள், நாம் எப்போது வீட்டிற்குள் புகுந்து திருடலாம் என திட்டம் தீட்டுகின்றனர் சிலர். திருடர்களின் நடமாட்டம் எப்போதுமே குறைந்த பாடில்லை. இவர்களை தடுப்பதற்கும், இவர்களை பிடிப்பதற்கும் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் அவர்கள் தம் கை வரிசையை காட்டி கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் சந்திரன் என்பவர் வீட்டை பூட்டி இருந்த நேரத்தில் அந்த பூட்டை உடைத்து வீட்டினுள் பிரெவேசித்த திருடர்கள் 2.5 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி ரூ.10 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதனை அறிந்த சந்திரன் உடனடியாக தன் வீட்டின் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன் தொடர்பாக வேலூர் சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரன் வீட்டை கொள்ளை அடித்த மர்ம நபர்கள் விரைவில் கண்டுபிடிக்க படுவார்கள் என கூறியுள்ளனர்.