நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

 ஜூலை 30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்காரணமாக, தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் காணொலி காட்சி மூலமாக கட்சி உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருடனும் அவ்வப்போது காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 30ம் தேதி காலை 10:30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு நிலை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version