துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த விமானமானது சோதனையிடப்பட்டது. அதில் பயணம் செய்து வந்த பயணிகள் அனைவருமே தனி தனியாக சோதனை செய்யப்பட்டனர். அவ்வாறு செய்ததில் துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூபாய் 40.62 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் கைப்பற்றபட்டது.
அவரின் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பளபளக்கும் தங்க கட்டிகள் பல இருந்திருக்கின்றது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரித்து உள்ளனர். அவ்வாறு விசாரித்ததில் இந்த தங்கம் முழுவதும் துபாயில் இருந்து கடத்தி வருவதாகவும் மேலும் இதனை மதிப்பானது ரூ. 40.62 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜோத்பூர் சுங்க அதிகாரிகளின் சோதனையில் 741 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் சிக்கியுள்ளது. மேலும் சோதனை நடந்து வருகின்றது.