நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ், 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 43 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சீன எல்லையில் நிலவி வந்த அசாதாரணமான சூழ்நிலைக்குப் பிறகு, ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிக் டாக், ஹெலோ, ஷேர்இட், பப்ஜி உள்ளிட்ட 117 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
43 செயலிகள்:
- அலி சப்ளையர்ஸ் மொபைல் ஆப் (AliSuppliers Mobile App)
- அலிபாபா வொர்க்பெஞ்ச் (Alibaba Workbench)
- அலிஎக்ஸ்பிரஸ் (AliExpress)
- அலிபே கேஷியர் (Alipay Cashier)
- லாலாமூவ் இந்தியா (Lalamove India)
- டிரைவ் வித் லாலாமூவ் இந்தியா (Drive With Lalamove India)
- ஸ்நாக் விடியோ (Snack Video)
- கேம்கார்ட் (Camcard)
- கேம்கார்ட் – பிசிஆர் (வெஸ்டர்ன்) (Camcard – BCR (Western))
- சோல் (Solu)
- சைனீஸ் சோசியல் (Chinese Social)
- டேட் இன் ஆசியா (Date in Asia)
- வீ டேட் (We Date)
- ஃப்ரீ டேட்டிங் ஆப் (Free Dating App)
- அடோர் ஆப் (Adore App)
- ட்ரூலி சைனீஸ் (Truly Chinese)
- ட்ரூலி ஏசியன் (Truly Asian)
- சைனா லவ் (China Love)
- டேட் மை ஏஜ் (Date My Age)
- ஏசியன் டேட் (Asian Date)
- ஃபிளெர்ட் விஷ் (FlirtWish)
- கய்ஸ் ஒன்லி டேட்டிங் (Guys Only Dating)
- டூபிட் (Tubit)
- வீ வொர்க் சைனா (We Work China)
- ஃபர்ஸ்ட் லவ் லிவ் – சூப்பர் ஹாட் லைவ் பியூட்டிஸ் லைவ் ஆன்லைன் (First Love Live)
- ரேலா (Rela)
- கேஷியர் வாலட் (Cashier Wallet)
- மாங்கோ டிவி (Mango Tv)
- எம்ஜிடிவி – ஹூனான் (MGTV Hunan)
- வீ டிவி வெர்ஷன் (We TV version)
- வீ டிவி – (We TV)
- வீ டிவி லைட் – (WeTV Lite)
- லக்கி லைவ் (Lucky Live)
- தவ்போவ் லைவ் (Taobao Live)
- டிங் டாக் (Ding Talk)
- ஐடென்டிடி வி (Identity V)
- ஐசோலாண்ட் 2 (Isoland 2)
- பாக்ஸ் ஸ்டார் (BoxStar)
- ஹீரோஸ் எவால்வ்ட் (Heroes Evolved)
- ஹேப்பி ஃபிஷ் (Happy Fish)
- ஜெலிபாப் மேட்ச் (Jellipop Match)
- மன்ச்கின் மேட்ச் (Munchkin Match)
- கான்க்விஸ்டா ஆன்லைன் 2 (Conquista Onli ne II)