6 சவரன் தாலி செயின் பறிப்பு

உத்தரமேரூர் அருகே தாலி செயின் பறிப்பு.

உத்திரமேரூர் சின்ன நாராசம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவிதா இவரின் கணவரின் பெயர் அன்பு. கவிதா நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் ராயர் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு தனிமையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது தேரடித் தெரு அருகே வந்த போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவிதாவை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்திலிருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.

அதிர்ச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பின்னர் அருகில் உள்ள உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version