பாலியல் தொந்தரவால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி… அடுத்தடுத்த சம்பவங்களால் பெற்றோர் அதிர்ச்சி!!

கருமத்தம்பட்டி அருகே பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கனியூரை அடுத்துள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. வீட்டின் அருகில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்றார்.

மதியம் சாப்பாடு இடைவேளையின் போது திடீரென மயங்கி விழுந்தார். விசாரணையின் போது சாப்பாட்டில் சாணி பவுடரை கலந்து கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி மாணவியை ஆசிரியர்கள் மீட்டு அரசு ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான 37 வயது நபர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நடவடிக்கைகளால் மனமுடைந்த மாணவி பள்ளியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு மாணவியை பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version