14 வயது சிறுமியை அக்கா கணவர் உட்பட 11 பேர் செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். முதல் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்துள்ளனர். மூன்றாவது மகளான 14 வயது சிறுமி 6ம் வகுப்பு வரை படித்துவிட்டு அருகில் தனது அக்கா வீட்டில் தங்கியபடி வேறொரு வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். உடல்நலக்குறைவில் இருக்கும் தந்தை, அக்காவின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அம்மா கூலி வேலை செய்து அடைக்கின்றார். சிறுமி வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அக்காவின் கணவரான சின்ராஜ் சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார். தன்னால் அக்காவின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்று நினைத்த சிறுமி வெளியில் இதை யாரிடமும் கூறாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்பு எப்பொழுதும் போல் தனது வேலைக்குச் சென்றுள்ளார். அங்கும் முதலாளியின் காமப் பார்வை சிறுமி மீது விழவே, குறித்த சிறுமி வீட்டின் கஷ்டத்தை எண்ணி அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர் சிறுமியை வன்கொடுமை செய்ததோடு, அவரது உறவினர்களான பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி, சேகர், சங்கர், சரவணன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர். சின்ராஜின் நண்பர்கள் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குமார், வடிவேல், சுந்தரம் உள்ளிட்டவர்கள் சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து தாயாரிடம் சிறுமி தெரிவித்ததன் பெயரில், பஞ்சாயத்து பேசப்பட்டுள்ளது. இதில் குமார் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொடுத்து பஞ்சாயத்தினை முடித்துள்ளனர். பணத்தினை வைத்து உடல்நலக்குறைவு பட்ட தந்தைக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அனைத்து உண்மைகளையும் சிறுமி கூறியதன் பெயரில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது